Pushpavanam Kuppusamy & Anitha Kuppusamy

About Me

திருமதி. அனிதா குப்புசாமி

நான் திருமதி. அனிதா குப்புசாமி. எல்லா வகைப் பாடல்களையும் பாடும் இசைக் கலைஞர். குறிப்பாக மக்களிசையைப் பாடி வருகிறேன்.

சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் கர்நாடக இசையில் M.A., பட்டம் பெற்றுள்ளேன்.

மக்களிசை(Folk Songs), பக்தி இசை(Devotional Songs), மெல்லிசை(Light Music) இவைகளை மேடைகளில் தனித்தனியாகவும் ஒருங்கிணைத்தும் பாடி வருகிறோம்.

சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் எனக்கு முன் பயின்றவரான திரு. புஷ்பவனம் குப்புசாமியைக் காதல் திருமணம் செய்து கொண்டேன்.

வெளி நாடுகளுக்குச் சென்று தமிழர்கள் நடத்தும் விழாக்களில் என் கணவரும் நானும் இசைக் குழுவினரோடு சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறோம்.

தமிழ், தமிழர், தமிழர்க் கலை மற்றும் பண்பாடு இவைகளை முன் வைத்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்.

தொலைக் காட்சி ஊடகங்களில் மக்களிசைப் பாடல்கள், மலரும் மொட்டும், அனிதாவின் சமையல், யூத் சிங்கர், உன் வாசம் என் நேசம் போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளேன்.

சமையற் கலை நூல்கள் எழுதியுள்ளேன்.

மக்களிசை, பக்தி இசை, சிறுவர் பாடல்கள் இவைகளை குறுந்தகடுகளாக பாடியுள்ளேன்.

என் தாய்மொழி இந்தியாக இருந்தும் தமிழ்மொழியின்பால் பற்றும் தமிழைத் தமிழாகப் பேசும் திறனும் கொண்டுள்ளேன்.